அரிசி கொள்வனவு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தயார்

தேசிய சந்தையில் அரிசிக்கான பற்றாக்குறையை தவிர்க்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், 55,000 மெற்றிக்தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளதாக, அமைச்சர், ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாகிஸ்தான் மற்றும் மியன்மாரில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மியன்மாரில் இருந்து 30000 மெற்றிக்தொன் அரிசியும், பாகிஸ்தானில் இருந்து 25,000 மெற்றிக்தொன் அரிசியும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அந்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

சில வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைத்து, அதன் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியூதின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் இரு வாரங்களுக்குள் குறித்த அரிசி நாட்டை வந்தடையும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]