அரவிந்த்சாமியை பாராட்டிய ராஜசேகர்

அரவிந்த்சாமியை பாராட்டிய ராஜசேகர்

“இது தான்டா போலீஸ்”, “எவனா இருந்தா எனக்கென்ன” திரைப்படங்களில் பொலிஸ் அதிகாரியாக நடித்தவர் டாக்டர் ராஜசேகர்.

rajasekhar

கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில், “கருடா வேகா” தெலுங்கு படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபடமாக அமைந்திருந்தது.

rajasekhar

கடந்த சில வருடங்களாக ராஜசேகருக்கும், நடிகர் சிரஞ்சீவிக்கும் இடையே சிறிய மனக்கசப்பு நிலவி வந்தது.

மனக்கசப்பை நீக்கி சுமூகமாக செல்ல முடிவு செய்த ராஜசேகர், கடந்த மாதம் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசியுள்ளார்.

இதையடுத்து இருவரும் மனக்கசப்பை மறந்து நண்பர்களாக மாறியிருக்கின்றனர்.

rajasekhar

கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து வந்த ராஜசேகர், தற்போது திரையுலகின் சூழ்நிலை மாறுதல்களை புரிந்துகொண்டு வில்லன் வேடத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,”சிரஞ்சீவி ரீஎன்ட்ரியான 150வது படமான “கைதி நம்பர் 150” (கத்தி ரீமேக்) படத்துக்கு வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருந்தனர்.

rajasekhar

அப்போது நானே நேரில் சென்று சிரஞ்சீவியை சந்தித்து வில்லனாக நடிக்க தயார் என ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

பிறகு அவரது மகன் ராம் சரண் நடித்த “துருவா” (தனி ஒருவன் ரீமேக்) படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராஜசேகர்.

rajasekhar

இருப்பினும் தமிழில் நடித்த அரவிந்த்சாமியே இப்படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார் என பட தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தனி ஒருவன் ரீமேக்கான “துருவா” திரைப்படத்தில் அரவிந்த்சாமி நன்றாகவே நடித்திருந்தார் என நடிகர் ராஜசேகர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]