அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!

அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2′, `வணங்காமுடி’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் அரவிந்த்சாமி மனைவியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இவரது தோழியாக சிம்ரன் நடிக்கிறார்.

நந்திதா, சாந்தினி ஆகியோர் மதுரை, தூத்துக்குடி பெண்களாக நடிக்கிறார்கள். இவர்கள் அரவிந்த்சாமியை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பதுதான் கதையின் ‘சஸ்பென்ஸ்’ என்று சொல்லப்படுகிறது.

டி. இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.