அரவிந்சாமி யின் அரசியல் ஆசை

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக நடித்து கொண்டிருப்பவர் அரவிந் சாமி.

arvind swamy

வில்லனாக நடித்து ரசிகர்களிடம் ஆதரவு பெற்ற அவர், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அரவிந்சாமி அவ்வப்போது சமூகம் தொடர்பான தனது கருத்துக்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

arvind swamy

பண ஒழிப்பு நடவடிக்கை முதல் பல்வேறு பிரச்னைகளில் மனம் திறந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் அரவிந்சாமி.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது பற்றியும் கருத்து பதிவு செய்திருக்கிறார்.

arvind swamy

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த விடயம் தியேட்டரோடு மட்டும் நின்றுவிடாமல் இந்த நடைமுறையை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றம், பாராளுமன்றத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல நடிகர்கள் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் நிலையில், அரவிந்த்சாமியும் அரசியல் கருத்தை பகிர்வதால் அவருக்கும் அரசியலில் ஆசை வந்திருக்கிறது என கிசுகிசுக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]