அரச நிறுவனங்களில் பசுமை எரிசக்தி ….

இலங்கையில் பசுமை எரிசக்தி  மாற்றத்துக்கான தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.   குறித்த வேலைத்திட்டத்தின் கீழ்  நாட்டிலுள்ள அனைத்து  அரச நிறுவனங்களிலும் சூரிய மின்சக்தி பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   அதன்முதற்கட்டம் இன்றைய தினம் காலை 8 மணிக்கு நிதியமைச்சில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் சகல அரச நிறுவன கட்டிடங்களிலும்   சூரிய மின்சக்தி பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். 2017ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தினூடாக 350 மில்லியன் ரூபா நிதி அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.