அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்

அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்

அரச உத்தியோகத்தர்கள்

இலங்கையில் 10 வீதத்துக்கும் குறைந்தவர்களுக்கே அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்கின்றன. அந்த வாய்ப்பிற்காகப் பலரும் கவலை கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அரச உத்தியேகாத்தர்கள் பாக்கிய சாலிகள். எனவே மக்களுக்கு சேவை செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

ஒளி விழா நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார்,
ஒளிவிழாவின் ஊடாக எங்களுடைய மனங்களிலே ஒளி உண்டாக வேண்டும். அந்த ஒளி பெரிய பிளம்பாகத் தோன்றி இந்தச் சமூகத்தின் பசி, பிணியுடன் இருக்கின்ற மிக வறிய மக்களுக்கு இந்த ஒளி சென்று சேரவேண்டும். அரச உத்தியோகத்தர்களாகிய அனைவருயை மனங்களிலும்ம இருள் நீங்கி ஒளி உண்டாகவேண்டும். 2018ஆம் அண்டிலிருந்து எங்களுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும்.

அரச உத்தியோகத்தர்கள்

எங்களுடைய மனங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டு, எங்களுடைய செயற்பாடுகளை சேவையாக மக்களுக்கு வழங்க முடியாது போனால் இவ்வாறான விழாக்களினால் எந்தப்பயனும் இல்லை. மனங்கள் விசாலமாக இருக்க வேண்டும். எங்களுக்கு மிகப்பெரிய கொடையை இறைவன் தந்திருக்கிறார்.

வேலை தேடி அலைகின்ற மிகவும் குறைந்த 10 வீதத்துக்கும் குறைவானர்களுக்கே இந்த அரச உத்தியோகங்கள் கிடைக்கின்றன. இறைவன் தந்த இந்தக் கொடையிலேயே எங்களிடம் இருந்து எதனையோ இறைளவன் எதிர்பார்க்கின்றான் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்களை விடவும் இந்தச் சேவைகள், தேவைகள் கிடைக்காதவர்கள், அந்தத் தேவைக்காக ஏங்குபவர்கள், அந்தத் தேவைக்காக சில நன்மைகளையாவது பெற்றுக் கொள்ளத் துடிக்கின்ற மிகவும் பாதிப்புற்ற சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டியடிதாரு அருள் கொடையினை சரியாகப்பயன்படுத்தவேண்டும்.

எந்த மதமாக இருந்தாலும் அந்த மதம் கூறுகின்ற நல்ல நெறி அதுதான், எங்களுக்குக் கடைக்கின்ற சந்தர்ப்பத்தில் செய்கின்ற சேவைகள் எங்களுடைய சந்தத்திகளுக்கு மாத்திரமல்ல மறுவாழ்விலும் நாங்கள் எதிர்பார்க்கின்ற அந்த வாழ்க்கைக்குத் துணையாக அமையும் என்பதனைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன என்றும் தெரிவித்தார்

ஒளி விழா நிகழ்வில், அருளுரை அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் , மெதடிஸ்த திருச்சபையின் பயிற்சி நிலையத்தின் தலைவர் சுகிர்தன் சிவநாயகம் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தமாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, கணக்காளர் கே.பிரேம்குமார், உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், நடன நிகழ்வுகள் அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், யேசு பாலனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் பாப்பாவின் நடனம் மற்றும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.

அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்அரச உத்தியோகத்தர்கள்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]