அரச அலுவலகங்களின் நேர மாற்றம் இன்று முதல் நடைமுறையில்

பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் நேர மாற்றம் இன்று முதல் முதல் நடைமுறையில்.

இதுதொடர்பாக அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவிக்கையில் இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும். பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும் என்றார்.

நிருவகத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]