அரச அதிகாரிகள் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச அதிகாரிகள் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச அதிகாரிகள் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்களாக உள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான அதிகாரிகள் குறித்து தவல்களை சேகரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள அரச உயர் பதவிகளில் உள்ளவர்கள், தான் சார்ந்த நாட்டுக்கு ஆதரவாக செயற்படக்கூடிய தீர்மானங்களை எடுப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னராக அரசியல்வாதிகள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.