அரசை பாதுகாக்கவே பதவியை துறந்தேன்! மாநாயக்க தேரர்களிடம் ரவி விளக்கம்

நல்லாட்சி அரசைப் பாதுகாப்பதற்காகவே தான் பதவி விலகினார் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த அவர், அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மாநாயக்கதேரர்களைச் சந்தித்து, தான் ஏன் பதவி விலகினார் என்பதற்கான காரணத்தை விளக்கியிருந்தார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘அரசில் இருக்கின்ற அமைச்சர்களையே துரிதமாக விசாரிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம், கடந்தகால சம்பவங்கள் குறித்த ஏன் இழுத்தடிப்பு செய்து வருகின்றது?

என்னை முன்னுதாரணமாக கொண்டு 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின் ஏனையவற்றையும் தயவுசெய்து அதேபோன்று செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்னை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதன் ஊடாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆகவே இதற்கு காலத்திற்கு நேரம் கொடுத்து சரியான சூழல் வந்த பின்னர் யார், என்ன நடந்தது என்ற விடயம் தெரியவரும்.ஒரு குற்றமும் இல்லை என்ற காரணத்தினாலேயே அனைத்தையும் நான் முன்வைக்கின்றேன்.


கூறியவற்றை சரியாக சொல்வதற்கு ஊடகங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. நாடாளுமன்றத்தில் நான் கூறும் வரை வேறு விதமாக நாம் செயற்படுவோம் என ஊடகங்கள் எண்ணியிருந்தன. எம் மீது குற்றஞ்சாட்டியவர்கள் மீது ஏதாவது ஒருவகையில் அந்த அழுத்தங்கள் வந்துசேரும்.

நடந்ததை நடந்தவாறு கூறுவது சரியான விடயம் என நான் கருதுகின்றேன்.சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்ட விதத்தை எதிர்காலத்தில் நாம் முன்னோக்கி கொண்டு செல்வோம். ஆணைக்குழுவிற்கனெ நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் என்னை மிகவும் சிறப்பாக நடத்தினர். அவர்களை நான் மதிக்கின்றேன். அதில் நம்பிக்கை வைத்தே நான் ஆணைக்குழுவில் முன்னிலையாகினேன். ஸ்ரீலங்கா வரலாற்றில் இதுபோன்ற விடயம் இதற்கு முன்னர் நடந்தது இல்லை. ஆசியாவில் வேறு நாட்டில் இல்லாத ஒன்றையே நான் ஏற்படுத்தினேன். அதிகார கஞ்சதனத்தால் இதனை செய்யவில்லை என்பது இதன்மூலமே புலப்படுகின்றது. எனது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எனது அரசாங்கத்தை பாதுகாக்கவே நான் அவ்வாறு செய்தேன்’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]