அரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச போன்று இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- ஹக்கீம்

வடக்கு கிழக்கு இணைப்பை வைத்து முஸ்லிம்களுக்காக அரசியல் பேசும் ஒரு கூட்டம் தேர்தலில் செயற்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

வடக்கையும், கிழக்கை இணைப்பதற்கு நான் இரகசியமாக ஒப்பந்தம் செய்தது போல பேசிக்கொண்டு திரிகின்றனர். இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிய முன்னாள் செயலாளர் இப்போது பல்டி அடித்துக்கொண்டு இப்படி பேசித்திரிகின்றார்.

இந்தக் காலகட்டத்தில் நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதில் எந்த நியாயம் இருக்கிறது எனவும் நிந்தவூரில் நடைபெற்ற வேட்பாளர் ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றோர் வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசலாம். அவர்களைப் போல இவர்களும் இதை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் அளவுக்கு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]