அரசியல் நியமனங்களுக்கு எதிராக போராட்டம்- வடக்கில் முடங்கிப் போன வடக்கு கல்வித்துறை

கல்வித்துறையை சீரழிக்கும் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்களுக்கு 1000 க்கும் அதிகமான நியமனங்கள் பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் அரசியல் ரீதியான நியமனங்களை கண்டித்து அழைப்புவிடுக்கப்பட்ட போராட்டத்தினால் வடக்கின் கல்வித்துறை முடங்கிப்போனது.

இன்று புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இத்தகைய முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்புவிடுத்திருந்தார்.

கல்வித்துறையை சீரழிக்கும் இத்தகைய நியமனங்களை எதிர்த்து இன்று 4ஆம் திகதி பாடசாலைகள், கல்வி அலுவலகங்களை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு வடக்கிலும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. எனினும் காலைவேளை ஒரு பகுதி மாணவர்கள் பாடசாலைகளிற்கு வருகை தந்திருந்த போதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்மையால் அவர்கள் நேரத்துடனேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]