அரசியல் தொடர்பான படங்களிலும் நடிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற படம் வருகிற 11-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையொட்டி இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முன்னோட்ட காட்சிகளில் ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார்கள்.

நேற்று இந்த குழுவினர் திருச்சிக்கு வந்தனர். திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது எனக்கு ஒன்பதாவது படம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நான் ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறேன். அத்துடன் வெளி நிறுவனங்களின் தயாரிப்பில் முதன் முதலாக நடித்து உள்ளேன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.

கூவத்தூர் சம்பவம் பற்றி ஆந்திராவில் தெலுங்கு படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்ற படங்களில் நடிப்பீர்களா? என்றும் கேட்கிறீர்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல கதையம்சம் உள்ள அரசியல் தொடர்பான படங்களிலும் நடிப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]