அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலை காணப்பட்டால் அரசுதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் – சிறிநேசன்!!

அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவகையில் அரசாங்கத்துடன் பேசிவருகின்றோம். அரசியல் தீர்வு கிடைத்தால். நாம் சந்தோசப்படுவோம். சிறுபான்மைத்தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும் அன்றி  நாங்கள் பேச்சுவார்த்தையை முறித்த குற்றச்சாட்டை ஏற்படுத்தாதவிதத்தில் ஒத்துழைப்பு வழங்கும்போது அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலை காணப்பட்டால் அரசுதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரித்துள்ளார்.

மட்டக்களப்பு – கரடியனாறு மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு செவ்வாய்கிழமை (15) நடைபெற்றது நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

வித்தியாலய அதிபர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மா காண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்லரெட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

510 புள்ளிகளைப்பெற்ற பைரவி இல்லம் முதலாம் இடத்தைப்பெற்று இவ்வாண்டு சம்பியனாகத் தெரிவானது. 451 புள்ளிகளைப்பெற்ற தானவி இல்லம் மற்றும் 380 புள்ளிகளைப்பெற்ற ஆரவி இல்லம் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பெற்றன.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கடந்தகாலங்களில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கைதிகளாக்கப்பட்டார்கள், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள் ஊடகவியலாளர்களும் கடத்திக்கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை.

அரசியல் தீர்வை வழங்காமல்

என்னும் அரசியல் தீர்வு முன்னெடுப்பின் வேகம் குறைவாகவே இருக்கிறது
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணக்கமாகப்பேசி தீர்வைக்காணமுடியாது என்ற நிலைப்பாட்டுடன் சர்வதேசத்தின் உதவியை நாடுவதற்கு எமது தற்போதைய முயற்சி உதவியாக அமையும்.

தீர்வு கிடைத்தால் நாங்கள் மகிழ்சியடைவோம் கிடைக்கின்ற தீர்வு அர்ப்பசொற்பமான தீர்வுகளாக இல்லாமல் நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

தீர்வு கொடுக்காமல் இடையில் முறிவு ஏற்பட்டால் அது எங்கள் பக்கம் ஏற்பட்ட முறிவு அல்ல அரசாங்கத்தின் பக்கம் ஏற்பட்ட முறிவு அந்த முறிவிற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டியது ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் என்ந செய்தியைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்படுகின்ற போது தமிழ் மக்களுக்குரிய தீர்வினைத் தருவதற்கு பெரும்பாண்மை இனத்தவர் மறுத்தால் நிரந்த்த தீர்வோன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த நாட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய அர்த்தம் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று மந்தகதியான செயற்பாடுகளில் ஈடுபடாது வேகமாக விவேகமாகச் செயற்பட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைத் தீர்த்துக் கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.