அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த காலங்களில் செய்த நல்லவற்றையும் எம்மால் மறக்க முடியாது. பயன்படுத்திவந்த காணிகளில 80 சதவீதமானவையை விடுவித்தமை மற்றும் 207 தமிழ் அரசியல் கைதிகளில் 107 கைதிகளை விடுவித்தமை போன்றனவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகரில் நடைபெற்ற   ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும்  நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இதனைக் கூறினார்.

கிராம அபிவிருத்திச்சங்கச் செயலாளர் சுப்ரமணியம்  ரகுபரன் தலைமையில் இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இளயதம்பி சிறிநாத்,  ஏறாவூர் நகர முதல்வர் ஐ. அப்துல் வாசித் , நகர சபை உறுப்பினர்களான கணேசன் பிரபாகரன் , எம்எஸ். நழீம் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒரு தொகை பாடசாலை மாணவர்களுக்கு    கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்  சமூக முன்னோடிகள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

சிறிநேசன் எம்பி தொடர்ந்து உரையாற்றுகையிவ் – சர்வாதிகாரத்தைவிட மக்களின் அணைக்க மதிப்பயிக்கவேண்டும். எமது ஐந்து வருடகால ஆயுள்கொண்ட பாராளுமன்றத்தை சர்வாதிகார அடிப்படையில் கலைக்கின்போக்கினைத் தோற்கடிக்க சிறுபான்மைக்கட்சிகள் ஒன்றிணைந்துசெயற்பட்டோம்.

அரசாங்கத்தை சூழ்ச்சியின் மூலம் அரசைக் கவிழ்ப்பது பிழையான நடவடிக்கை என்பதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்த்தது. ஜனநாயகத்தை சட்டவாட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு உச்ச கட்ட ஆதரவை வழங்கியது.

நிறைவேற்று அதிகாரம் பக்கச் சார்பாக செயற்பட்டது சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் நீதித்துறை சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டதன் காரணமாக ஜனநாயக அடிப்படையில் ஜனநாயக அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சிய அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு என்பன போன்ற விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]