அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியானது, அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் ஊடாக நகர தனியார் பஸ் தரிப்பிடம் வரையில் சென்று மீண்டும் காந்திப் பூங்கா வரை வந்து நிறைவடைந்தது.

தமிழர்களின் ஒருமித்த குரல், அரசியல் கைதிகளை விடுதலை செய், நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், என்ற வாசகங்ககளையுடைய சுலோகங்கள் தாங்கியவாறு 30 நிமிடம் கோஷங்கள் எழுப்பட்டதோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தில் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]