அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 2ஆம் நாளாகவும் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 2ஆம் நாளாகவும் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 2ஆம் நாளாக இன்றும் (புதன்கிழமை) கிளிநொச்சியை நோக்கி நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கைதிகள் விவகாரத்தை சட்ட விவகாரமாக அணுக கூடாது எனவும் மாணவர்கள் கோரியுள்ளனர்.

அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர்.

யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான நடைபயணம் நேற்று பளையை சென்றடைந்த நிலையில், இன்று அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் அரசியல் கைதிகளின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]