அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம்- ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை?

நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியல் சாசனத்துக்கு முரணான வகையிலேயே இடம்பெற்று உள்ளது என பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி புதிய பிரதமரின் அரசியல் பெரும்பான்மை பலத்தை நிரூபணம் செய்யுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டில் இடம்பெறும் சம்பவங்களால் நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றால் இந்த புதிய மாற்றங்கள் நீடிக்காது, நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் , நாங்கள் எங்கள் ஆதரவாளர்களிற்கு வன்முறையில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனினும் இந்த மாதிரியான சூழ்நிலையில் எதுவும் நடக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]