அரசியல் குழப்பத்தால் ரூபாயின் பெறுமதியில் கடும் சரிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாயின் மதிப்பு 60 சதத்தினால் குறைந்து, 156.74 ரூபாயாக நேற்று வீழ்ச்சியடைந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றதை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி, அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 4.29 ரூபாயினால், சரிந்துள்ளது. இது 2.81 வீத வீழ்ச்சியாகும்.

2017 பெப்ரவரி 14ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 152.45 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]