அரசியல் குறித்து சிம்பு அதிரடி முடிவு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் சிம்பு அரசியல் குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் சிம்பு நானும் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிம்பு தெரிவித்ததாவது, ‘தமிழக மக்களுக்கு பிரச்சனை என்று அனைவரும் ஒன்று சேரும்போது நானும் அரசியலுக்கு வருவேன். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ரஜினி, கமல் அளவிற்கு நான் இல்லை. நான் ஒரு சாதாரண நடிகன் தான்.

மணிரத்னம் இயக்கி வரும் படத்தில் சிம்புவுடன், விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.