‘அரசியல் குறித்து அமெரிக்கத் தூதுவர் பேசவில்லை’

இலங்கை்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவை ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று மஹிந்த ராஜபக்ஷவிடம், அமெரிக்கத் தூதுவர் கூறியதாக தகவல் வெளியானது.

குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், “மரியாதை நிமித்தமாகவே, மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். இதன் போது அரசியல் விடயங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]