பிரதமர் அரசியல் இலாபம் தேட முயற்சித்திருப்பதாக “கபே” குற்றச்சாட்டு

கபே

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடும் நிகழ்வின் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சித்திருப்பதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்காக கையெழுதிடும் நிகழ்வு குறித்து கபே இந்தக் குற்றச்சாடடை முன்வைத்துள்ளது.

குறித்த நிகழ்வு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்வரும் தேர்தலில் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பாப்பதாக கூறியுள்ளார்.

அவரது கருத்தானது தேர்தல் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளினூடாக மறைமுகமாக அரசியல் இலாபம் தேடுவதாகும் என, கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]