அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாததும், புதிய தேசியவாதமும் நூல் வெளியீடு

பூகோளவாததும், புதிய தேசியவாதமும்

யாழ்ப்பாணம்; அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாததும், புதிய தேசியவாதமும் நூல் வெளியீடு நேற்று சனிக்கிழமை (24) யாழில் இடம்பெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில், முதற்பிரதியினை அருட்தந்தை ஜெயசீலன் அடிகளார் வெளியிட்டு வைத்தார்.

பூகோளவாததும், புதிய தேசியவாதமும்

இந்தநிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உட்பட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றம் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலர்கலந்து கொண்டிருந்தனர்.

பூகோளவாததும், புதிய தேசியவாதமும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]