அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாட்டு குழுவின் ஒன்றுகூடல் நாளை

 

சீர்திருத்த  அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான செயற்பாட்டு குழு நாளைய தினம் கூடவுள்ளது. அதன்போது அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து செயற்குழு கவனம் செலுத்த உள்ளது. எனினும் இதுவரை புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பரிந்துரைகள் கிடைக்கவில்லை என செயற்குழுவின் உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ தலமையிலேயே ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு,  தேர்தல்முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரத்தை நீக்கல், அதிகார பகிர்வின் அடிப்படைகள், மதம் மற்றும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட  ஆறு விடயங்கள் நாளைய தினம்  கலந்துரையாடப்படவுள்ளது.

பல்வேறு தரப்புக்களும் தமது கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை அரசியல் அமைப்புப் பேரவையில் சமர்பித்துள்ளன.
அனைத்து அறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு பாராளமன்ற விவாதம் நடத்தப்பட்டு மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய உத்தேச அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.