முகப்பு Cinema அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் – கங்கணா ரணாவத்

அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் – கங்கணா ரணாவத்

ஜெயம் ரவியின் தாம் தூம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கங்கணா ரணாவத்.

இந்தியில் முன்னணி கதாநாயகியான இவர், அண்மை காலமாக இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழாரம் சூடிவருகின்றார்.

இது குறித்த சில ஊடகங்கள் நீங்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கு பதிலளித்த கங்கணா, ‘நான் இப்போது ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து வருகிறேன். இப்போது தான் பங்கா திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நான் எப்போதும் ஒரு வேலையை செய்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்வேன். அதனால் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன், குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்.

வேறு எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றும் ஊழியராக இருப்பவர் தான் அரசியல்வாதி’ என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com