அரசியலில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதமாக வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை, பாரபட்சம், பெண்களைத் தரக்குறைவாக நடத்துதல் போன்றவைகளில் பெண்களுக்கான நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போரால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வட பகுதியில் பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களும் அதிகளவில் உள்ளன. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அரசியல் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு மோசமானதாகவே உள்ளது. இந்த நிலை மாறி பெண்களின் நிலை உயர்ச்சியடைய பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியலில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]