அரசியலில் குழப்பநிலை நீடிப்பதால் மீண்டும் மந்திரகோலை கையில் எடுத்துள்ள மஹிந்த- அரசியல்வாதிகள் பெரும் அச்சம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளன.

மஹிந்த ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும். அந்தக் காலப்பகுதியில் மந்திர கோல் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்ட வந்தது அனைவரும் அறிந்ததே….

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமராக மஹிந்த தொடர்ந்து செயற்படுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

இந்நிலையில் மஹிந்த மந்திர கோலுடன் வலம் வர ஆரம்பித்துள்ளார் என கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள் பூஜை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]