தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்

தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்.

அரசியலமைப்புச் சட்டம்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்து விட்டு கூட்டு எதிர்க்கட்சி சொல்லுகின்ற 1978ம் ஆண்டு 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா? அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா? இதற்கான பதிலை புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் எமது அன்பர்கள் சொல்ல வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டம்

மட்டக்களப்பு  மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று (16) திங்கட்கிழமை நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்வுகளில் முதண்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டம்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நமது நாட்டிலே இன்று மிகப் பெரியதொரு காரியத்தைப் பாராளுமன்றம் செய்து கொண்டிருக்கின்றது. அதுதான் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்குகின்ற ஒரு விடயம் அந்த அரசியலமைப்புச் சாசனத்தின் இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எமது தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பல புலமை வாய்ந்தவர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்று உடனடியாக நிராகரிகின்றார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. எங்கோ வெளிநாடுகளில் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டங்களைப் பார்க்கின்றார்களே தவிர எங்களுடைய நாட்டிலே இந்த நாட்டின் யதார்த்தத்தைக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்ற இந்த அரசியலமைப்புச் சட்டம் பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை.

அரசியலமைப்புச் சட்டம்

இறுதி வரையிலே சரியான உலக நாகரீகத்தைக் கடைப்பிடிக்காத இந்த நாட்டிலே, எந்த சந்தர்ப்பத்திலும் இன விரோதத்தையும், இனக் குரோதத்தையும் தன்னுடைய அரசியலமைப்பிலே கொண்டு வந்த இந்த நாட்டிலே தற்போது அந்த விரோதங்கள், குரோதங்கள் தவிர்க்கப்பட்டதான இந்த அரசியலமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டிருக்கின்றது என்கின்ற அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல், எங்கோ இருக்கின்ற தூரத்துத் தண்ணிகளை நம்பிக் கொண்டு, உலகத்திலே எங்கோ இருக்கின்ற மிக மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களை பார்த்துக் கொண்டு எங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்திலே ஒன்றும் இல்லை என்று சொல்லுகின்றார்கள்.

அரசியலமைப்புச் சட்டம்

இதுபோன்றே 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் அவர்களின் காலத்தில் இந்த நாட்டிற்கு ஓர் அரசயலமைப்புச் சட்டம் வரையப்பட்டு வழங்கப்பட இருந்தது. அந்த அரசியலமைப்புச் சட்டத்திலே நாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சி என்கின்ற விடயம் ஓசைப்படாமல் எடுக்கப்பட்டது. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற வகையிலே அந்த அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை நாங்கள் நிராகரித்தோம். அவ்வாறு நிராகரித்ததன் காரணமாக இன்றுவரை 02வது குடியரசுச் சட்டம் என்று சொல்லப்படுகின்ற 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசியலமைப்புச் சட்டம்

2000ம் ஆண்டு வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றிருந்தால் தொடர்ச்சியாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற விடயமே இப்போது தேவைப்படாத விதத்திலே பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற வகையிலே பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை வழங்குகின்ற அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டில் செயற்பாட்டுக்கு இருந்திருக்கும். அதனை நிராகரித்தமையால் நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தையே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

அரசியலமைப்புச் சட்டம்

வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டமே போதுமானது. அந்த அரசியலமைப்புச் சட்டம் தான் இந்த நாட்டுக்குத் தேவை என்று கூட்டு எதிர்க்கட்சி தற்போது கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே இப்போது வரையப்பட்டிருக்கின்ற இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்தால் நிச்சயமாக நாங்கள் 2000ம் ஆண்டு தவறவிட்டது போன்ற ஒரு தவறு விடுவோம். 1978ம் ஆண்டு சட்டத்தைத் தான் நாங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை வரும். கூட்டு எதிர்க்கட்சி முன்வைக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் தான் அது.

அரசியலமைப்புச் சட்டம்

எனவே தற்போது தயாரிக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் அன்பர்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்து விட்டு கூட்டு எதிர்க்கட்சி சொல்லுகின்ற 1978ம் ஆண்டு 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா? அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா? இதற்கான விடையைச் சொல்லிவிட்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிப்பது என்கின்ற விடயத்தை இரண்டாவது முறை சிந்தித்துப் பாருங்கள் என்றார்.

அரசியலமைப்புச் சட்டம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]