அரசாங்க ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்- இந்த மாத சம்பளம் கிடைக்குமா?

இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இதுவரையில் முழுமையான அரச சேவை முடங்கியுள்ளது.

இதுவரையில் முழுமையான அரச சேவையினுள், அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ள நிலையில், இடமாற்றம், பதவி உயர்வு உட்பட அனைத்தும் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக இன்னமும் நிதி ஒதுக்கப்படாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்கு போதுமான பணம் இல்லாத நிலையில், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த வேண்டும். எனினும் இதுவரை பல அரச நிறுவனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதுவரையில் குறைந்த ரீதியில் பாதுகாப்பு பிரிவு உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கான சம்பளம் கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

நிதி மற்றும் உரிய அரசாங்கமின்றி பாரிய சிக்கலில் அரச ஊழியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]