அரசாங்கம் மாறினால் புதனன்று அமைச்சரவையும் மாறும்

அமைச்சரவை மாற்றம் அடுத்துவரும் புதன்கிழமை(21) இடம்பெறும் என, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

தேசிய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் தற்போது காணப்படும் அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேசிய அரசாங்கம் இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 என்றும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 என்றும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.