அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரிக்கை – ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் தன்னுடன் இருக்காது என்பதை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]