அரசாங்கம் சட்டவிரோதமானது – ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

தபோதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும். இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]