அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் முதல் முயற்சியே இந்த ஜனபலய போராட்டம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) ஜனபலய போராட்டம் கொழும்பு –கோட்டை என பல முக்கிய இடங்களில் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் பல திரளான மக்கள் கலந்துக்கொண்ட நிலையில், அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘இந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இரகசியமாக சட்டமூலங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
நாட்டை பிளவடையச் செய்வது மாத்திரமின்றி தொடர்ந்து வரிகளை சுமத்தி மக்கள் மீதான சுமைகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.
ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் கீழ் மட்டம் முதல் மேல் மட்ட வர்த்தகப் பிரிவினர் வரை அனைவரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
நாட்டிலிருந்து தற்போது ஜனநாயகம் மெதுவாக மறைந்து, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தவைகயில், நல்லாட்சியை அரசாங்கத்தை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றும் எமது முயற்சியின் முதல் படியே இந்த ஜனபலய போராட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]