அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா

மைத்திரி – ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கூட்டு எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சாளரான டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேஷான் சேமசிங்க, சிசிர ஜெயக்கொடி தேனுக விதானகமகே ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

“2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை அகற்றும் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் இப்போது கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள். உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இடம்பெறும் வெளிநாட்டுத் தலையீடுகள் தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]