அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம்

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முக்கிய கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) இரவு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த 16 உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொறுப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]