அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு மனோ அழைப்பு

எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும் எனவும் அவர் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]