‘அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் உடனடியாக தீர்மானிக்கவும்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் உடனடியாக தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றுஇடம்பெற்ற இப்தார் நிகழ்ச்சில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தின் பின்னரே இரு தரப்பினருக்கிடையிலும் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]