அரசாங்கத்தால் இழப்பீட்டு அலுவலக சட்டமூல வர்த்தமானி வெளியீடு

இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், அரசாங்கத்தால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ், இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூலம், வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், விரைவில் நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

புதிதாக கொண்டு வரப்படும், இழப்பீட்டுக்கான அலுவலக சட்டம், 1987ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க, ஆட்கள், சொத்துகள், தொழிற்துறைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரமளிக்கும் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையிலானதாக இருக்கும்.

புதிய சட்டத்தின் மூலம், இழப்பீட்டுக்கான அலுவலகம், அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.

அரசியலமைப்பு சபையினால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நியமிக்கப்படத் தவறினால், அவர்கள் அரசியலமைப்பு சபையினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக கருதப்படுவார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]