அரசமைப்பு மறுசீரமைப்பில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது மு.க.

தேசிய பிரச்சினைக்கு அரசமைப்பு மறுசீரமைப்பின் மூலம் தீர்வுகாண முடியாது மாறாக புதிய அரசமைப்பொன்று கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர்வழங்கள் வடிகால் அபிவிருத்தி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணுவது அத்தியவசியமானதாகும். ஆனால், இதனை அரசமைப்பு மறுசீரமைப்பின் மூலம் மாத்திரம் சரி செய்துவிட முடியாது. கட்டாயமாக புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிடின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணுவது கடினமான விடயமாகும்.

அரசமைப்பு மறுசிரமைப்பு மாத்திரம் செய்யப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கவில்லை. புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என்றே நல்லாட்சி அரசு வாக்குறுதியளித்திருந்தது. அதன் அடிப்படையில் புதிய அரமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறினார்.