அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை மீளவும் வவு­னி­யா­வுக்கு மாற்­று­வ­தற்கு சட்­டமா அதிபர் மறுப்பு

தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மூன்று அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை மீளவும் வவு­னி­யா­வுக்கு மாற்­று­வ­தற்கு சட்­டமா அதிபர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் 8 ஆண்­டு­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள செங்கன் எனப்­படும் இரா­ஜ­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக்ஷன்,
கணேசன் தர்ஷன் ஆகிய மூவ­ருக்கு எதி­ராக கடந்த 2013ஆம் ஆண்டு வவு­னியா மேல்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு மீதான விசா­ர­ணைகள் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வந்­தன.

அவ்­வாறு வவு­னியா மேல் நீதி­மன்­றதில் இடம்­பெற்று வந்த வழக்­கினை சட்­டமா அதிபர் திணைக்­களம் அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றுக்கு இட­மாற்­றி­யுள்­ளது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து தொடர்ச்­சி­யான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் அம்­மூன்று கைதி­களும் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த விடயம் சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் குறித்த கைதி­களின் கோரிக்கை தொடர்பில் சட்­டமா அதி­ப­ருடன் பிரத்­தி­யே­க­மான பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்­தி­யுள்ளார். இதன்­போதே சட்­டமா அதிபர் தனது மறுப்­பினை தெரி­வித்­துள்ளார்