அர­சி­யல் கைதி­கள் போராட்­டம் கைவி­டப்­ப­டாது

அர­சி­யல் கைதி­கள்அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உண்ணாவிரதப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று, அர­சி­யல் கைதி­கள் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர்.

4 வரு­டங்­க­ளாக வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்ற வழக்கை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு இட­மாற்­றி­யதை எதிர்த்து மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­கள் கடந்த மாதம் 25ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர்.

இவர்­க­ளது உற­வி­னர்­கள், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்தி­னர் என்ற இரு­த­ரப்­புக்­க­ளும் ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ல சிறிசேனவை நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்­தப் பேச்­சுக்­க­ளின் உறு­தி­யான முடிவு வழங்­கப்­ப­டா­த­தைச் சுட்­டிக் ­ காட்டிய தமிழ் அர­சி­யல் கைதி­கள், தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரையில் உண்ணாவிரதப் போராட்­டத்­தைக் கைவி­டப் போவ­தில்லை என்று தெரி­வித்­த­னர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]