அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகளுக்கிடையிடையேயானா இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

கோலி 9 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

அதிரடியாக விளையாடிய ராகுல் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் உள்ளடங்கலாக 36 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ராகுல் – ரெய்னா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 69 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

மணிஷ் பாண்டே – ஹர்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஓட்டங்களைக் உயர்த்தினர் ஜோடி சேர்ந்தனர். இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

214 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என களறங்கியது அயர்லாந்து அணி. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்குத் திணறிய அயர்லாந்து அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.

அயர்லாந்து அணியானது 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்தது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். டி20 தொடரை இந்தியஅணி 2-0 என கைப்பற்றியது.

லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாகவும், சஹால் தொடர்நாயகனானவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய அணி இந்திய அணி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]