அம்புலன்ஸ் ரொபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ள நெதர்லாந்து மாணவர்கள்!

அம்புலன்ஸ் ரொபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ள நெதர்லாந்து மாணவர்கள்! அம்புலன்ஸ் ரொபோ

நெதர்லாந்தைச் சேர்ந்த மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பாக ரொபோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். நெதர்லாந்தில் மருத்துவத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ‘ஆம்புலன்ஸ்’ ரொபோ. இதன் சேவையை தொடர்பு கொள்பவதற்கு 911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டால் போதும், இந்த மருத்துவ ரொபோ பறந்து வந்து உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்யும். அம்புலன்ஸ் ரொபோ

இவ்வகையான அம்புலன்ஸ் ரொபோவை இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்சு போன்ற ஐரோப்பியன் நாடுகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவ்வகையான ரொபோக்கள் நெடுஞ்சாலைகளில் மாரடைப்பு, வலிப்புநோய், சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவதுக்கு பெரும் உதவியாக இருக்கும். அம்புலன்ஸ் ரொபோ

இதைக் கண்டுபிடித்த நெதர்லாந்து மாணவர்கள் தெரிவித்ததாவது, ‘மாரடைப்பு நோய் பாதித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில்தான், இந்த பறக்கும் அம்புலன்ஸ் ரொபோவை உருவாக்கினோம். மருத்துவ உதவிக்கு ‘911’-யை அழைப்பவர்களின் வதிவிட விவரங்களை, கூகுள் மப் மூலமாக அம்புலன்ஸ் ரொபோ தெரிந்து கொள்ளும். அதனால் அழைப்புகள் வந்தவுடன், சம்பவ இடத்தை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது இந்த மருத்துவ ரொபோ. அம்புலன்ஸ் ரொபோ

தன்னிச்சையாக செயல்படும் இந்த ரொபோவை, இயக்குவது மருத்துவ நிபுணர்களே ஆவார். ரொபோவில் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா, சூழ்நிலையை விளக்க அதற்கேற்ற வகையில் மருத்துவ உதவிகளை, நேரலை காணொளியில் கையாளுகின்றனர் மருத்துவர்கள். மேலும் ரொபோவுடன் இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள், மாரடைப்பு, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களைச் சமாளிக்க உதவுகின்றன என்று தன்னுடைய படைப்பின் மகத்துவத்தை விளக்குகிறார், அலாக் மோமன்ட்.

இரண்டு வருடங்களாக, ஆராய்ச்சியிலிருந்தது இந்த அம்புலன்ஸ் அம்புலன்ஸ், தற்போது ரொபோவைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இதன் பயனாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]