அம்பிலன்ஸ் வண்டியுடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – மாவடிவேம்பு வைத்தயசாலைக்கு முன்பு இன்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் அம்பிலன்ஸ் வண்டியுடன் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயளியை மட்டக்களப்பு போதiனா வைதியசாலையில் அனுமதித்துவிட்டு மாவடிவேம்ப பிரதேச வைத்தியசாலைக்கு திரும்பிய வைத்தியசாலைக்குள் நுளைய முற்பட்ட அம்பியுலன்ஸ் வண்டியில் மருதமுனையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் விபத்து எற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

   

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த எம்.சாஹிர் (வயது 27)மற்றும் ஏ.எம்.ஆசிக் (வயது 24) ஆகிய இவரும் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]