நவீன வசதிகளுடனான அம்பாறை பிரதான பஸ்தரிப்பு நிலையம் திறப்பு

நாடு பாரிய கடன் சுமையில் சிக்கியிருந்த போது தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் இருந்திருக்க முடியுமா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

அம்பாறை பிரதேசத்தை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் மூன்றாவது யுகம் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நவீன வசதிகளுடனான அம்பாறை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டளவில் இலகுவான முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான பொருளாதாரமும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய யுகமும் ஏற்படுத்தப்படும். ஆண்டு ஆண்டில் அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை பாரிய கடன்சுமையை எதிர்நோக்கியிருந்தது. தற்சமயம் நாட்டின் பொருளாதாரம் உறுதியான மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறினார். மகாவலித் திட்டத்தின் பின்னர் அம்பாறை பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தியை நல்லாட்சி அரசாங்கமே மேற்கொண்டுவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]