அம்பாந்தோட்டை உடன்படிக்கை மீளாய்வுக்கு காலம் அவசியமாகும் ; ஜனாதிபதி திட்டவட்டம்

அம்பாந்தோட்டை உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதலளித்துள்ளார்.

அம்பாந்தோட்டை உடன்படிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கையை சர்வதேச வர்த்தக அமைச்சர் மளிக் சமரவீக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இதன்போது இந்த உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்ய மேலும் காலம் அவசியமாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டள்ள வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க,

அம்பாந்தோட்டை உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்ய கால அவகாசம் அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் தொடர்பிலான தீர்மானத்தை அறிவிப்பார் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]