வரி அதிகரிப்பால் புகையிலை நிறுவனத்திற்கு 25 மில்லியன் ரூபாய் நட்டம் – சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன

வரி அதிகரிப்பால் புகையிலை நிறுவனத்திற்கு 25 மில்லியன் ரூபாய் நட்டம் – சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
 rajitha senaratne

வரி அதிகரிக்கப்பட்டமையினால் புகையிலை நிறுவனத்திற்கு 25 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

புகையிலை தொடர்பில் உலகிலையே அதிகமான வரியே இலங்கையில் அறவிடப்படுகிறது.

இதனால் பிரித்தானியாவை சேர்ந்த புகையிலை நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகைத்தந்து பல நெருக்கடிகளை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், புகையிலை பாவனையானது நூற்றுக்கு 15 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.