அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கட்சித் தலைவர்கள், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்போது ரவியின் அமைச்சுப் பதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து சட்டமா அதிபர் விடுவிக்கும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிற அதேவேளை, குறிப்பாக ரவி கருணாநாயக்க மற்றும் அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய தயாசிறி ஜயசேகர ஆகியோரை மீண்டும் அமைச்சுப் பதவிகளில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]