அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை

புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிக்குமாறு, பொது எதிரணியினரிடம் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற முற்சிக்குமாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் போது, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே பதவியை விட்டுக் கொடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை கைப்பற்றுவதாக கூறிவந்தவர்கள் தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவதை நிறுத்திவிட்டு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது எதிரணியினரிடம் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]