அமைச்சர் மனோ கணேசனுக்கு அரசாங்கம் கொடுத்த விலை அதிகம்- கெபே

அமைச்சர் மனோ கணேசன்க்குமாகாண சபைத் தேர்தல்கள் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுத்த விலை மிக மிக அதிகம் என கெபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

உறுப்பினர் தெரிவு முறைமை 60 இற்கு 40 என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகின்றது என்பதை அறியக் கிடைத்தவுடன், இறுதி நேரத்தில் தீர்மானத்தை 50 இற்கு 50 என உறுப்பினர் தெரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சர் ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், மனோ கணேசன் ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்தனர். இதற்கு அரசாங்கம் தலைசாய்க்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இச்சட்டத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானத்தை மாற்றி அரசாங்கம் கொடுத்த விலை அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.