அமைச்சர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman), சல்லிக்கட்டில்

2 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்நாடு, அலங்காநல்லூரில் இன்று ஆரம்பமான சல்லிக்கட்டு போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் Kangeyam Kalaiதொண்டமானின், 3 காளைகள் பங்கேற்றுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும், ஒவ்வொரு வகையில் சல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சல்லிக்கட்டு, மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் அவற்றை அடக்கி வருகின்றனர். சல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் இடம்பெற்றுள்ளன.Senthil Thondaman

சல்லிக்கட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இலங்கையின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் (Senthil Thondaman), சல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார். அவனியாபுரத்திலும் செந்தில் தொண்டைமானின் காளை பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. (தட்ஸ்தமிழ்)